• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிவகாசி வர்த்தக சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம்..,

ByK Kaliraj

Jun 5, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வர்த்தக சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் குமாரவேல் தலைமையில் நடைபெற்றது

அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1-சிவகாசி மாநகரில் இரவு 11:30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ராஜபாளையம்,சாத்தூர்,விருதுநகர் போன்ற நகரங்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லை என்பதால் சிவகாசி போக்குவரத்து அலுவலகத்துக்கும் அது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் கடிதம் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது

2-சிவகாசி மாநகரில் திருமண மண்டபங்களில் தற்காலிக கடைகளை வாடகைக்கு கொடுக்கக் கூடாது என்று இரண்டு முறைகள் பதிவு தபால் முலமும் ஒருமுரை நேரடியாகவும் தபால் கொடுத்துள்ளோம்.அதையும் மீறி திருமணம் மண்டபங்களை தற்காலிக கடைகளுக்கு வாடகைக்கு கொடுக்கும் திருமண மண்டபங்கள் மீதும் வரும் நிறுவனங்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது

3-சிவகாசி வழியாக செங்கோட்டையிலிருந்து பெங்களூரு வரை தினசரி ரயில் இயக்க அது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.