• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பாஜகவினர் நேரலையில் கண்டு களித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி..,

ByM.I.MOHAMMED FAROOK

May 31, 2026

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 134வது அத்தியாயத்தில் இன்று பல்வேறு ஊக்கமளிக்கும் விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பு காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம், மாநில செய்தி தொடர்பாளர் அருள்முருகன், மாவட்டத் தலைவர் முருகதாஸ், மாநில செயலாளர் அமுதா ராணி, தொகுதி தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானபாஜக நிர்வாகிகள் மற்றும்பாஜகவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,
“நாட்டின் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களின் சாதனைகளை பாராட்டினார்.

இந்திய விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் தொடர்ந்து சிறப்பான சாதனைகளை படைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தடகளப் போட்டிகளில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது என்றார். சமீபத்தில் தேசிய அளவில் சாதனை படைத்த ஓட்டப்பந்தய வீரர் குரிந்தர்வீர் சிங் உள்ளிட்ட வீரர்களின் முயற்சிகளை பாராட்டிய பிரதமர், இளைஞர்கள் விளையாட்டு மற்றும் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சாதாரண மக்களின் செயல்பாடுகளையும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். அவர்களின் பங்களிப்புகள் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முக்கியமானது என்றும், மக்கள் தங்களது துறைகளில் சிறந்து விளங்கி இந்தியாவின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து இந்தியாவின் பாரம்பரிய பெருமையை எடுத்துக்கூறும் வகையில் சேழர் காலத்தைச் சேர்ந்த செப்பேடுகள் (Copper Plates) நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டதை பெருமையுடன் குறிப்பிட்டார்.

நெதர்லாந்து பிரதமர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சேழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் எனவும் மோடி கூறினார்.

இந்தியாவின் தொன்மையான நாகரிகம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை மீட்டெடுத்து தாய்நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சேழர் பேரரசின் பாரம்பரியத்தை உலகம் அறிந்து கொள்வதற்கான முக்கிய நிகழ்வாக இது அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் வரலாற்று மரபுகளை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.