• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில்ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..,

வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை மற்றும் வைகாசி திரு விழாவை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு விற்பனை நடந்தது.வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் வாரச் சந்தை உள்ளது.

இங்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை ஆடு, மாடு,கோழி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்வரும் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையும் தற்போது கிராமப்புறங்களில் வைகாசி திருவிழாவும் நடைபெற்று வருவதால் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் கோழிகள் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக நடைபெற்றது.

இந்த சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் சிவகங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்கள் மற்றும் லோடு வண்டிகளில் வெள்ளாடு செம்பரி ஆடு ஆந்திரா வகை கொடியாடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்காக சந்தைகளில் நிறுத்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து செம்மறி ஆடு வெள்ளாடு கருப்பு ஆடு வகைகள் அதிக விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

10 முதல் 15 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரையிலும், நாட்டுக்கோழி ரூ.700 முதல் ரூ.1500 வரை விற்பனையாகி ரூ.2கோடிக்கு வர்த்தகம் நடந்தது இதனால் கிராமப்புறங்களில் ஆடு கோழி வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.