• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சமுக நீதிகள் துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

May 27, 2026

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் ஏற்புடையதல்ல ஏற்கனவே ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் மாவட்ட செயலாளர் அறிவித்திருந்தார் எங்கள் தலைவர் இந்த ஆர்ப்பாட்டம் தேவையில்லை என அறிவுறுத்தி இருந்தார் .

ஆனால் மற்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரியாததால் வந்திருந்தார்கள் வந்திருந்தவர்களுக்கு திமுக தோழர்கள் கல் எரிந்து மிக மோசமான வன்முறை செயலை அரங்கேற்று இருக்கிறார்கள் இது ஏற்புடையதல்ல.

எங்கள் தலைவர் இதுபோன்ற வன்முறை சம்பவங்களுக்கு எப்போதும் இடம் கொடுக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். நாங்கள் திமுகவை என்றும் நேசிக்கக் கூடியவர்கள் கடந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கு முன்பும் அவர்களுடன் ஒன்றாக பயண பட்டோம்.

அண்ணன் ராசாவிற்கு விடுதலை சிறுத்தைகள் மீது என்ன கோபம் தெரியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி செயலர் சண்முகம் தற்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் குறைகளை சொல்ல அவகாசம் வேண்டும் என கூறியுள்ளது குறித்து

உண்மைதான் பதவியேற்று 10 நாட்கள்தான் ஆகிறது ஏபிஜிபி நியமனம் செய்து பொறுப்பு ஏற்றுள்ளாரா பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகள் திமுகவுடன் பயணம் செய்துள்ளோம். தனிப்பட்ட முறையில் ஆ ராசா விடுதலை சிறுத்தைகள் மீது என்ன வருத்தம் கோபம் என்று தெரியவில்லை.

நாங்கள் நாகரிக அரசியலை விரும்புபவர்கள்..

விடுதலை சிறுத்தைக்கு இது ஏற்புடையதல்ல..

மேகதாது அணை தொடர்பாக அறிக்கையை கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.

கர்நாடகா அரசு இந்த பிரச்சனையை மேடவாது அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை.

அனைத்து கட்சி கூட்டம் கூட்டில் தமிழ்நாடு விவசாயிகளுக்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டது.

அதிமுக எம்எல்ஏ ராஜினாமா செய்து தாவிக்கவில் இணைந்தது குறித்து எனக்கு தெரியவில்லை.

தமிழ்நாடு அரசியல் என்பது நாகரிக அரசியல் நோக்கிய நகர வேண்டும் என்னுடைய நிலைப்பாடு.

தொடர்ந்து சொல்லி வருகிறோம் சமூக கட்டமைப்பு அப்படி இருக்கிறது தடுக்க வேண்டியது பொறுப்பு எல்லோருக்கும் உண்டு.

தவித்துகள் மீதான தாக்குதல் குறித்து?

தமிம அரசு இந்த பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும்.. ஒருவரை சந்தித்து தடுத்து நிறுத்த வேண்டியது குறித்து ஆலோசனை செய்வோம்.

காவல்துறையினர் தலித்துக்கு எதிராக செயல்படுகிறார்கள்.. வருத்தம் இருக்கத்தான் செய்கிறது இதை போக்க வேண்டிய கடமை காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கிறது.

ஜாதி மதம் பாராமல் சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்த வேண்டும்

வேங்கைவயல் சம்பவம் மற்றும் ஆணவ படுகொலை தடுக்கப்படுமா?

நம்பிக்கை கவுரவம் தீர்மானத்திலேயே ஆணவ படுகொலையை தடுப்பதற்கு தண்ணீர் சட்டம் வகுக்க வேண்டும் என்றும், கடந்த திமுக அரசு ஆணையம் போட்டு ஆணவ படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்டது.

விசாரணை அடிப்படையில் இந்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் கட்வுட் மயக்கதில் ஆட்சி பவன் கல்யாண் கேள்வி ?

பவன் கல்யாண் அவருக்கும் ஆந்திராவில் எப்படி கட் வுட்டு வைத்தார்களோ அதே போல தான் பார்க்கிறேன். மயக்கத்தில் கூறுகிறார் போல் தெரிகிறது

இந்த அரசு சட்ட ஒழுங்கை கைப்பற்றுவதற்கு காலபகாசம் இருக்கிறது.

ஏடிஜிபி இப்போதுதான் பதவியேற்று இருக்கிறார்கள். இவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதுதான் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆட்சியாக தான் இருக்க வேண்டும்.

விவசாய கடன் தள்ளுபடி குறித்து?

50000 பயிர் கடன் தள்ளுபடி என்பது முடிவானது அல்ல படிப்படியாக நிதிநிலை அறிக்கையை பொறுத்து தள்ளுபடி ‌ குறித்து பேசப்படும். முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம் என அமைச்சர் வன்னியரசு கூறினார்.