அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரை ராஜினாமா செய்ய வைத்தது 100 சதவீதம் குதிரை பேரமென எம்.பி இன்பதுரை தெரிவித்துள்ளார்.

“அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பதாக அறிவிக்கும் முன்னரே அவர்கள் மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சென்று சந்திப்பதும், எக்ஸ்பிரஸ் வேகத்தில் அவர்களை கட்சியில் இணைத்து கொண்டு மின்னல் வேகத்தில் அவர்களுக்கு தவெக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குவதும் திட்டமிடப்பட்டவை. இது 100 சதவீத குதிரை பேரம்!”என
வழக்கறிஞர், அதிமுக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.





