• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கெட்டுப்போன குளிர்பானம் புகார் தெரிவித்த வாடிக்கையாளரை மிரட்டிய கடை உரிமையாளர்!

ByPrabhu Sekar

May 22, 2026

தாம்பரத்தை அடுத்த வாலாஜாபாத் ரோடு, தங்கவேல் நகர், மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு வரும் “ஜே கே ஹாட் பப்ஸ் அண்ட் டீ ஸ்டோர்” என்ற கடையில் குளிர்பானம் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர் அப்பொழுது அந்த குளிர்பானங்கள் கெட்டுப் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குழந்தைகள் குடித்த குளிர்பானம் கெட்டுப்போனதாக பெற்றோர் கூறிய நிலையில், இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விளக்கம் கேட்டபோது, வாடிக்கையாளரை மிரட்டும் வகையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே கடும் கவலைக்கு காரணமாகியுள்ளது. உணவு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக இந்த கடையில் ஆய்வு நடத்தி, கெட்டுப்போன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்களின் உடல்நலத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் கடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், உணவு பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் உரிமைகள் குறித்து மீண்டும் ஒரு முறை கேள்விகளை எழுப்பியுள்ளது.