• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்..,

ByPrabhu Sekar

May 20, 2026

சென்னை அடுத்த தாம்பரம் ரயில்வே நிலையத்தில் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

DREU மற்றும் CITU தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டு, ரயில்வே துறையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், IRT மற்றும் IDT தொடர்பான 10 சதவீத பணியிடம் மற்றும் காலியிட நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும் என்றும், இடமாற்றத்திற்கு NOC பெற்ற தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகள் எழுதிய பதாகைகளை ஏந்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.