• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகில் 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை..,

ByS.Ariyanayagam

May 10, 2026

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் அருகே 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது. திண்டுக்கல் அடுத்த ரெட்டியார்சத்திரம் அருகே K.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் புவனேஸ்வரி(26) மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்துசென்றனர்

அப்போது 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே புவனேஸ்வரிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது

இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ராகவன் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் பாலமுருகன் ஆகியோர் புவனேஸ்வரி மற்றும் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.