விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் கீழச் செல்லையாபுரம் அருகில் உள்ள கல்குவாரி கிடங்கில் இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கியதாக வந்த தகவலை அடுத்து ஏழாயிரம் பண்ணை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்று நடத்திய விசாரணையில் அருகில் உள்ள வெள்ளையாபுரம் கிராமத்தில் அம்மன் கோவில் பொங்கல் பண்டிகை நடைபெற்று வருவதாகவும் இந்த பொங்கல் பண்டிகைக்கு திருத்தங்கல் ஆலா ஊரணி பகுதியைச் சேர்ந்த சந்திரகுப்தன் என்பவரது மகன் சிவன் வயது 22 மற்றும் சுப்ரமணியன் என்பவர் மகன் சஞ்சய் வயது 17 இருவரும் நண்பர்களுடன் அருகில் உள்ள கல்குவாரி கிடங்கில் குளிப்பதற்காக சென்றதாக தெரிய வருகிறது.

அப்போது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிவன் மற்றும் சஞ்சய் திடீரென நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால் காவல்துறையினருக்கும் தீயணைப்பு மீட்புத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கிய இளைஞர்களை தேடி வந்த நிலையில் உடல் கிடைக்கவில்லை. மேலும் உதவிக்கு சாத்தூர் தீயணைப்பு மீட்பு பணி வீரர்களும் சிவகாசி தீயணைப்பு நிலையம் என மூன்று பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் தேடி வருகின்றனர்வந்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு வந்து குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பல மணி நேர தேடுதலுக்கு பின்னரும் உடல் கிடைக்காத நிலையில் மீட்பு பணிவீர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.






