• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா..,

ByK Kaliraj

May 3, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்மம், ரிஷபம், அன்னபட்சி, குதிரை, வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ஆறாம் நாள் திருவிழாவில் பராசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் கோயமுத்தூர் ஜி.கே. குரூப்ஸ் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஏழாயிரம் பண்ணை அன்னை பராசக்தி மாத சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட 501 பெண்களுக்கு கோயம்புத்தூர் தொழிலதிபர் காளியப்பன் அவர்கள் சேலை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.