• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுக பிரமுகர் வீட்டில் சிக்கிய பணம்..,

ByS.Ariyanayagam

Apr 21, 2026

திண்டுக்கல் திமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு அளிக்க வைத்திருந்த பணம் சிக்கியது. திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம், பரிசு கூப்பன்கள், டோக்கன்கள் பறிமுதல்
செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் பணியினர் நள்ளிரவில் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு விலாஸ் இறக்கம் பகுதியில் திமுக பிரமுகர் முத்துமாமுண்டி(51). இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தேர்தல் பறக்கும் படையினரை கண்டதும் முத்துமாமுண்டி தப்பி ஓடிவிட்டார்.

இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் முத்துமாமுண்டியின் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1,34,000, ரூ.8000-ம் பரிசு கூப்பன்கள், டோக்கன்கள், வாக்காளர் பட்டியல், வாக்காளர்களின் ஆதார் அட்டை நகல்கள், குடும்ப அட்டை நகல்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான்சிக்கந்தர், துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.