• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு..,

ByK Kaliraj

Apr 19, 2026

சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் கடந்த 13ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்கனவே கலைஞர் காலனிச் சேர்ந்த பாண்டியராஜ் பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாயில்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த கருப்பசாமி, மடத்துபட்டியை சேர்ந்த ராஜ்குமார், ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

இவர்களுடன் சேர்த்து பலி எண்ணிக்கை மூன்றாக இருந்த நிலையில் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேல கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 44) என்பவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். இவருடன் சேர்த்து பட்டாசு வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த ரமேஷிற்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

இதனால் பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.