தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரை செய்து வருகின்றது.
திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் அழகம்மாள் அவர்களை ஆதரித்து நத்தம் பஸ் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்பொழுது அவர் பேசியதாவது

மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் நாம் தமிழர் இதுவரையிலும் யாருடையும் கூட்டணி அமைக்காமல் தனித்து களம் காண்கிறோம் நத்தத்தில் போட்டியிடும் வேட்பாளர் அழகம்மாள் அவர்கள் எந்த பின்புலமும் இல்லாத சாதாரண பெண் அவருடைய தகுதி என்னவென்று கேட்டால் படிப்பும் மண்ணுக்கும் மக்களுக்கும் துடிப்புடன் பணியாற்றும் எண்ணமும் தான் அவருடைய தகுதியாக இருக்கிறது. வாக்குக்கு நாம் தமிழர் கட்சி பணம் வாக்குக்கு பணம் கொடுக்கும் கூட்டம் இல்லை இதுவரை தந்ததும் இல்லை இனி எப்போதும் தரப்போவதும் இல்லை.
உங்கள் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகின்ற கூட்டம் தான் நாம் தமிழர் கட்சி விவசாயிகள் கடனாளி ஆனால் அந்நாடே கடனாளி நாடு ஆகிறது. விவசாய கடன், நகை கடன், கல்வி கடன் உள்ளிட்டவைகளை தள்ளுபடி செய்தவர்கள் நாடே கடனில் உள்ளது அக்கடனை யார் தள்ளுபடி செய்வது . மாணவர்கள் கடனாளியாவதற்கு சரியான கல்வி முறையே இல்லாததுதான் காரணம் எனக் கூறினார் .

விவசாய கடன் கல்வி கடன் உள்ளிட்டவைகளை தள்ளுபடி செய்யும் அரசுகளை நாமும் தள்ளுபடி செய்ய வேண்டும்
குடியரசு என்பது குடிக்கிற மக்கள் கொடுக்கிற காசில் நடக்கிற அரசு குடியரசு
தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆளவில்லை எனவும் குடிக்கின்ற மக்கள் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் ,
இலவசம் என்பது ஏமாற்றும் திட்டம் என்பது மக்களுக்கு என்றைக்கு தெரிய வருகிறதோ அன்றைக்கு தான் மாற்றமும் வரும் பணத்துக்கு வாக்கு செலுத்தினால் உன் இனத்துக்கு தூக்கு எனவும் பேச்சு பணத்தை வங்கி கணக்கில் செலுத்துபவர்களுக்கு உங்களது வாக்குகளையும் வங்கிகளிலேயே செலுத்துங்கள்.

மாற்றம் என்பது என்னில் இருந்து உன்னில் இருந்தும் வருவது பணத்தையும் கணினி, டிவி ,மிக்ஸி ,கிரைண்டர், என தரும்பொழுது தரமான தண்ணீரை தர முடியாதா எனவும் கேள்வி,
வேலையில்லை எனும் சொல்லுக்கு வேலையே இல்லாமல் என்னால் செய்ய முடியும்
அனைவருக்கும் அரசு வேலை தரவும் எங்கள் அரசு செய்ய முடியும் என்ன பேசினார். இதில் ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




