• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தின் நம்பர் ஒன் தொகுதி ஆக்குவேன் அமைச்சர் சூளுரை..,

ByS.Ariyanayagam

Apr 12, 2026

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றி காட்டுவேன் என அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பிரச்சாரத்தில் சூளுரைத்தார்.

ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சக்கரபாணி,
திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி, வில்வாதம்பட்டி, தும்பலப்பட்டி மற்றும் மரிச்சிலம்பு ஆகிய ஊராட்சிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த ஆண்டுகளில் நமது அரசு செய்து முடித்துள்ள எண்ணற்ற மக்கள் நலப் பணிகளை பொதுமக்களிடையே விரிவாக எடுத்துரைத்தார்.

திராவிட மாடல் அரசின் சாதனைகளை நினைவுகூர்ந்த அப்பகுதி மக்கள், அவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர். தமிழ்நாட்டை வளர்ச்சியின் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் “திராவிட மாடல் 2.0” அரசு மீண்டும் அமைய வேண்டியதன் அவசியத்தை அவர் மக்களிடம் ஆழமாகப் பதிவு செய்தார். குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஸ்டாலின் அறிவித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வாக்குறுதிகளை அவர் சுட்டிக்காட்டினார்:

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவுபடுத்தப்படும். ஒட்டன்சத்திரம் தொகுதியை தமிழகத்தின் நம்பர் ஒன் தொகுதியாக மாற்றி கட்டுவேன். இதற்காக 24 மணி நேரமும் பாடுபடுவேன். என்னென்ன புதுமைகள் வேண்டுமோ அத்தனையும் கொண்டு வருவேன் என சூளுரைத்தார்.