• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பழங்குடியினரின் அம்மன் கோவில் திருவிழா..,

BySeenu

Apr 9, 2026

​கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகச் சீங்கம்பதி பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்றார். அங்கு உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு மலைவாழ் மக்கள் அவருக்கு வழங்கிய வரவேற்பு அளித்தனர். பின்னர் பாரம்பரிய நடனத்தை உற்சாகத்துடன் அவர்களுடன் இணைந்து ஆடினார்.

கோவை, ​தொண்டாமுத்தூர் தொகுதியின் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாக்குகளைச் சேகரிக்கச் சென்ற எஸ்.பி. வேலுமணிக்கு, சீங்கம்பதி கிராம மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

ஆண்டுதோறும் அங்குள்ள அம்மனுக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் இன்று நடந்த திருவிழாவில் தங்களின் பாரம்பரிய இசை மற்றும் தாளங்களுக்கு ஏற்ப மக்கள் நடனமாடிக் கொண்டு இருந்த போது, அவர்களுடன் இணைந்து எஸ்.பி. வேலுமணியும் உற்சாகத்துடன் பாரம்பரிய நடனத்தைப் பகிர்ந்து கொண்டார்.

​ சாமானிய மக்களுடன், குறிப்பாக மலைவாழ் மக்களுடன் அவர் கலந்துரையாடியது அப்பகுதி மக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தங்களின் தேவைகளைக் கேட்டறிந்த எஸ்.பி. வேலுமணி, மீண்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

ஏற்கனவே தொகுதியின் வளர்ச்சிக்காகச் செய்து உள்ள பணிகளை விளக்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.