• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவிப்பு..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது
அச்சம்தவிழ்த்தான் கிராமம் இந்த கிராமத்தில் ஊரின் வடக்கு பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் பகுதிக்கு வடக்கு அச்சம்தவிழ்த்தான் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது.

இந்த கிராமத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு பரசேரி என்ற ஜாதி பெயரை குறிப்பிட்டு பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் ஜாதி பெயரில் உள்ள ஊரை மாற்றி வடக்கு அச்சம் தவிர்த்தான் என்ற பெயரில் அரசாணை வெளியிட வேண்டும் என பல முறை கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் போட்டு மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசும் ஜாதி பெயரில் தெரு ஊர் இருக்கக் கூடாது என்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையிலும் கிராம கூட்டத்தில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆனால் இதுவரை அரசாங்க வெளியிடப்படாமல் உள்ளதால் இதை கண்டித்து வடக்கு அச்சம் தவித்தான் கிராமத்தைச் சேர்ந்த 130 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக பிளக்ஸ் போர்ட் வைத்துள்ளனர்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் நடைபெறும் என்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.