• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் -அர.சக்கரபாணி உறுதி..,

திண்டுக்கல் வேடசந்தூரில் கோகுலம் நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் அறிமுக கூட்டம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ‌.பெரியசாமி தலைமை ஏற்றுப் பேசினார்

கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி பேசிய போது கூறியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கு வழங்கி தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

பெண்களுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லாத விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை மாத தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற திமுக ஆட்சியில் இருந்து ரூ 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் தொகுதி அதிகளவு பெறுகிறார்கள் அதற்கு அடுத்தபடியாக வேடசந்தூர் தொகுதியில் மகளிர் உரிமை தொகை அதிகளவு பெண்கள் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடுகிறார் என்று நினைத்து திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனை திட்டங்களை வீடு வீடாகச் சென்று பொது மக்களை சந்தித்து எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்துக்கு அனைவரும் தீவிரமாக வாக்கு சேகரிக்க வேண்டும்.

காவிரி அமராவதி ஆகிய ஆறுகள் இணையும் இடத்தில் இருந்து திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம் மற்றும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பும் திட்டத்திற்கு ரூ 5400 கோடி திமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்காக ரூ 97 லட்சம் கிட்ட மதிப்பீடு செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு அதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டு அதன் ஆய்வு முடிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில்
திமுக ஆட்சி அம்மா இந்த உடன் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். இதனால் மிகவும் வறட்சி பகுதியான திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம் ஆகிய தொகுதி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்றைக்குமே குடிநீர் பிரச்சனை வராது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல திட்டத்திற்கான முன்னெடுப்பை நாங்கள் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சர்ருமான உதயநிதி ஸ்டாலின், மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி ஆகியோர் ஆதரவோடும் மக்களின் பெரும் ஆதரவோடும் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்

கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன், காங்கிரஸ் கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் காசிபாளையம் சாமிநாதன், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்குமார், கொங்கு நாடு மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அருள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன்
திமுக ஒன்றிய செயலாளர்கள் வேடசந்தூர் கவிதா பார்த்திபன், வடபதுரை சுப்பையன், பாண்டி, குஜிலியம்பாறை சீனிவாசன், ராஜலிங்கம், நகர செயலாளர்கள் வேடசந்தூர் கார்த்திகேயன், வடமதுரை கணேசன், எரியோடு செந்தில்குமார், பாளையம் கதிரவன், அய்யலூர் கருப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள்
வேடசந்தூர் கிருஷ்ணமூர்த்தி, வடமதுரை மலைச்சாமி, குஜிலியம்பாறை ஜெயபால்,
மாவட்ட குழு உறுப்பினர் ராஜரத்தினம், மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.