• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஐ. பெரியசாமிக்கு கிராம மக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு

ByS.Ariyanayagam

Apr 2, 2026

அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு பொதுமக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பஞ்சம்பட்டி பாஸ்கா மைதானத்தில் அமைச்சரும் வேட்பாளருமான ஐ பெரியசாமி பரப்புரை மேற்கொண்டார்.
கிராம மக்கள் ஐ. பெரியசாமிக்கு கும்ப மரியாதை உடன் வரவேற்பு அளித்தனர். அப்போது ஐ. பெரியசாமி பேசியதாவது: ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பஞ்சம்பட்டி, ஆரிய நல்லூர், கலிக்கம்பட்டி முன்னிலை கோட்டை ஆகிய பகுதிகளில் 4, 584 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வசதி கிடைக்கும். ஆத்தூர் நிலக்கோட்டை வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் உட்பட பல பகுதிகள் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள் அனைத்து தேவைகளும் நிறைவேற்ற திமுக அரசு பாடுபடும். எனவே முதல்வர் ஸ்டாலினை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.