• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே கடமான் திருடியவர்கள் கைது..,

ByS.Ariyanayagam

Aug 20, 2026

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே மலைப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது – மான்கொம்புகள், மான்இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சோதனை செய்தபோது கடமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து

தோட்டத்தின் உரிமையாளர் தங்கவேல் மற்றும் ஒட்டன்சத்திரம் நாயக்கனூரில் சின்னச்சாமி, முக்கிய பிரமுகர்களாக வலம் வரும் காலாஞ்சி பட்டியை சேர்ந்த ராஜா மற்றும் புது காலாஞ்சி பட்டியை சேர்ந்த சரவணன் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து கட மான் கொம்புகள், மான் இறைச்சி கைப்பற்றப்பட்டது.

மேலும் கடமான் சிவப்பு பட்டியலில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ன்படி பட்டியலில் உள்ள கடமனை எப்படி வேட்டையாடினர்.

என்பது குறித்தும் தொடர்ந்து தீவிர விசாரணையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரி நேரில் விசாரணை

குற்றவாளிகளை ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி நான்கு பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.