• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் தொகுதியில் தவெக பெண் வேட்பாளர் என்.நாகஜோதி..,

அரசு பெண் டாக்டர் பணியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திமுக, அதிமுக, தமக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சி நந்தவனப்பட்டியை சேர்ந்த என்.நாகஜோதி
(வயது 49) என்பவரை தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்

இவர் எம்.வி.எஸ்சி., படித்து திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தவர் அப்பணியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடுவதற்காக சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டு தவெகவில்
உறுப்பினராக சேர்ந்து நிலையில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில்
முக்கிய ஜாதியான ஒக்கலிக கவுடர் என்பதாலும், பெண்களுக்கும் வாய்ப்பு என்ற அடிப்படையிலும் முன்னுரிமை கிடைத்து வேட்பாளராக மாறியுள்ளார்.

அரசியலுக்காக தனது அரசு டாக்டர் பணியை புறக்கணித்துவிட்டு தேர்தல் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.