• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தளவாய் சுந்தரம் போட்டி..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்
தொகுதிகள் குளச்சல் விளவங்கோடு கிள்ளியூர் என கடந்த 2021_ சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகள் காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் கிள்ளியூர் தொகுதியில் த.மா.க. சார்பில் டாக்டர் நவீன் சிமோன்
போட்டியிடுகிறார். கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் யார், யார் என்ற அதிகார பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.

அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தளவாய் சுந்தரம் போட்டியிடுகிறார். தி.மு.க., பாஜக வேட்பாளர்கள் யார் யார் என்ற அறிவிப்பு வரவில்லை.