திண்டுக்கல் அருகே பெண்கள் உட்பட 5 பேர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்தது.
திண்டுக்கல்லை அடுத்த RMTC- காலனி அருகே, ரெங்கசமுத்திரப்பட்டியில் கோயில் பிரச்சனை காரணமாக கோபி(25), ராமகிருஷ்ணம்மாள் (45), முனியாண்டி(50), பாலமுருகன்(21), கருப்பாயி(70) ஆகிய 5 பேர் மீது கத்தி மற்றும் இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்குதல் நடைபெற்றது.

இதில் பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதி
மேற்படி சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




