• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

டிராக்டரில் மொபெட் மோதி தொழிலாளி பலி..,

எரியோடு அருகே பழுதாகி நின்று இருந்த டிராக்டரில் மொபெட் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலே இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதம்நகரைச் சேர்ந்த பரமசிவம் (வயது 55) இவர் களி மண்ணால் விளக்கு தயாரித்து ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டு வருகிறார்.

வேடசந்தூரில் விற்பனை செய்து விட்டு அங்கிருந்து கோவிலூர் செல்வதற்காக தனது மொபெடில் வந்து கொண்டிருந்தபோது சின்னராவுத்தன்பட்டி பிரிவை அடுத்து கூவக்காபட்டியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் பழுதாகி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருத டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மொபெட் மோதியதில் அதை ஓட்டி வந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து ஏரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசி வழக்கு பதிவு செய்து பரமசிவத்தின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
—–‌