• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

சிலிண்டர்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி நூதன பிரச்சாரம்..,

வேடசந்தூர் தொகுதியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் வருவாய் துறையினர் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வழங்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்கி விட்டார்கள்.

அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இருக்கின்ற நிலையில் தேர்தல் நடத்தும் வருவாய் துறையினர் வாக்குப்பதிவு விவரங்களை பொதுமக்களிடையே பல்வேறு முறையில் பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேடசந்தூர் ராஜேந்திரன், குஜிலியம்பாறை நந்தகோபால் ஆகியோர் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர்கள் பாரதி, சல்மா, தமிழ்செல்வி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் வேடசந்தூர், ஏரியோடு, கோவிலூர், வடமதுரை, குஜிலியம்பாறை, பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம பகுதிகளில் வீடுகளில் பயன்படுத்த தனியார் கேஸ் ஏஜென்சிக்கு சென்றும், சரக்கு வேனில் கொண்டு செல்லப்படும் கேஸ் சிலிண்டர்களிலும் தேர்தல் நாளை குறிப்பிட்டு நமது வாக்கு நமது உரிமை என்ற ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வீடு வீடுகளுக்கு எளிதாக தேர்தல் விழிப்புணர்வு கொண்டு சேர்க்கும் வகையில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தட்டுப்பாடாக உள்ள கேஸ் சிலிண்டர்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருவாய் துறையினர் நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.