• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சாலையை கடந்த போது லாரி மோதி மில் தொழிலாளி பலி.!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மேக்கி (வயது 23) இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி பிரிவில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மில்லில் இருந்து அருகே உள்ள அய்யர்மடம் என்ற ஊருக்கு நடந்து வந்து திண்டுக்கல் – கரூர் நான்கு வழிச்சாலையை கடந்து ஓட்டலுக்கு சாப்பிடுவதற்கு சென்றபோது அப்போது கரூர் சாலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த லாரி மேக்கி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த மேக்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மேக்கியின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற லாரியை தேடி வருகிறார்.