• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,600 பறக்கும் படையினர் பறிமுதல்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் ஒட்டன்சத்திரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காரில் வேடசந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஜமாலுதீன் என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 84,600 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.