• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50வது ஆண்டு திருவிழா..,

Byசோலைஆதி

Mar 20, 2026

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50வது ஆண்டு திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது. இந்ததிருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கேடயத்தில் திருவிழா கொடி அலங்கரிக்கப்பட்டு செண்ட் மேளத்துடன் நான்கு ரதவீதியும் சுற்றி வந்தனர். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு பூஜை நடந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. உபயதாரர் கன்னியப்ப முதலியார் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.இன்று மாலை சிங்க வாகனத்தில் சுவாமி நான்கு ரத வீதியும் பவனி வருதல்,இரண்டாம் நாள் மண்டகபடி ஏற்பாடுகளை முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் செய்து வருகிறார்.6ம் நாள் பட்டு பல்லக்கு சுவாமி பவானி வருதல், ஏழாம் நாள் புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறுகிறது .எல் ஐ சி கதிரேசன் விஜயா சார்பாக தினசரி மாலை சக்கரத்தாழ்வார் புறப்பாடு நடைபெறுகிறது.