• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

வேப்பமரம் விழுந்ததில் பசு கன்று இறந்த சம்பவம்..,

Byசோலைஆதி

Mar 20, 2026

சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நேற்றைய முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் வெள்ளைச்சாமி மகன் முத்துச்சாமி என்பவருடைய வீட்டின் பின்புறம் சுமார் 3 வயது பசு கன்று கட்டி வைத்திருந்தார். பலத்த காற்றுக்கு அருகில் இருந்த வேப்பமரம் பசு கன்று மீது விழுந்தது இதில் சம்பவ இடத்திலே பசு கன்று இறந்தது.

சர்க்கரை அம்மாள், பூங்கோதை, முருகன், சுதா, முத்துலட்சுமி ஆகியோருடைய வீட்டு மேற்கூரை ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்த கிராமத்தில் 25 தென்னை மரங்கள், ஒரு மா மரம் உள்பட வாழை மரங்கள் சேதமடைந்து உள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் மற்றும் கிராம உதவியாளர்கள் மழைக்கு சேதம் அடைந்த பகுதியில் கணக்கு எடுத்தனர்.