• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மின் இணைப்பு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது..,

ByPuthar Pandian P

Mar 18, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டுவைச் ஊரைச் சேர்ந்த சத்யா (வயது 56) என்பவர் பள்ளபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
பள்ளபட்டியைச் சேர்ந்த பரமசாமி மகன் குமார் (வயது 44) தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயரில் தானமாக பத்திரம் பதிந்து பட்டா வாங்கியுள்ளார்.

அந்த நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக அடங்கல், மற்றும் சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சத்யா குமாரிடம் 5 ஆயிரம் கேட்டும் அல்லது 4 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கூறி அலைகழிப்பு செய்தாக கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் குமார் புகார் அளித்தார்.

அதன் பிறகு குமாரிடம ஆயிரம் ரசயனம் தடவிய 4 ஆயிரம் பணம் கொடுத்து அனுப்பினர். பள்ளபட்டி கிராம நிர்வாக அதிகாரி அலுலத்திற்கு சென்றார் அப்போது கிராம நிர்வாக அலுவலர் சத்யா அங்குள்ள பள்ளபட்டியைச் சேர்ந்த மணி மகன் சாந்த குமாரிடம் பணம் கொடுக்க சொன்னார். சாந்தகுமார் 4 ஆயிரம் பணம் வாங்கினார்.
அப்போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக பிடித்தனர்.

அதன் பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சத்யா, அவருக்கு துணையாக இருந்த சாந்தகுமார் ஆகியோர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் பள்ளபட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.