• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பைக்கில் உள்ள மற்றொரு ஹெல்மட்டை திருடி செல்லும் நபர்..,

BySubeshchandrabose

Mar 12, 2026

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சி பேருந்து நிறுத்தத்திற்கு பின்புறம் இருசக்கரம் வாகன காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இதில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியூர் சென்ற நிலையில் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வருகை தந்த போது அதிலிருந்து ஹெல்மெட் காணாமல் போய் இருந்தது.

இதனை அடுத்து காப்பக உரிமையாளரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது.

அதில் இருசக்கர வாகனத்தை நிறுத்துவது போல் வருகை தந்த நபர் ஒருவர் பைக்கில் இருந்த ஹெல்மெட்டை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

பின்னர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

வெளியூர் செல்லும் நபர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து வாகன காப்பகத்தில் நிறுத்திவிட்டு செல்லும் நிலையில் அதிலும் திருட்டு நடைபெற்றிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வாகன காப்பகத்தில் கடந்த மாதம் இருசக்கர வாகனம் ஒன்றும் திருடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.