திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படை வருகை தந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படை ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அறிக்கை செய்துள்ளனர்.

மேற்படி பாதுகாப்பு படையினருக்கு இன்று (10.03.2026) திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் மருத்துவர் V.சசிமோகன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் ஆகியோர் தலைமையில், தேர்தல் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் பணிகள் குறித்தும். பதட்டமான வாக்கு சாவடிகளை எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.



