• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா கைவரிசை காட்டிய 2 பேர் கைது..,

ByS.Ariyanayagam

Mar 10, 2026

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வள்ளி, விராலிமலை பகுதியை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் கைது செய்த நத்தம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைக்கும் படி நத்தம் காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.