• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பெண் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

ByK Kaliraj

Mar 9, 2026

பள்ளி,கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் வேலைக்கு செல்லும் பெண்களும் அவசியம் காவலர் செயலியை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் காவலர் செயலி மூலம் தொடர்பு கொண்டால் உடனே போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும் புகார் செய்தவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக வைத்திருப்பார்கள். குற்றவாளிக்கு புகார் செய்த நபர் குறித்து எந்த விவரமும் தெரிவிக்க மாட்டார்கள். ஆகையால் பெண்கள் அச்சமின்றி புகார் தெரிவிக்கலாம். நள்ளிரவில் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்பட்டாலும் உதவி கேட்டு காவலர் செயலியை தொடர்பு கொள்ளலாம்.

பெண்களுடைய சுய பாதுகாப்புக்கு காவலர் செயலி பெரிதும் உதவி செய்யும் ஆகையால் இதனை அவசியம் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பெண் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.