திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் , தலைவர் கீ.வீரமணி தலைமையில் “2026 சட்டப்பேரவை தேர்தலும்- நமது கடமையும்”- என்கிற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதல் திமுக பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் சிறப்புறையாற்றினர்.

அதனை தொடர்ந்து தந்தை பெரியார் திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்தனர் அதனை தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு மணி அம்மையார் அவர்களுக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் கூட்டத்தில் கீ.வீரமணி பேசுகையில் தமிழ்நாட்டில் 3-நாட்களில் தேர்தல் அறிவித்தாலும், எப்போதும் தேர்தல் அறிவித்தாலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் கோட்டைக்குப் போகப்போகிறார். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. தாய்மார்கள் முக மலர்ச்சியுடன் இருக்கிறார்கள் இந்த ஆட்சியில்.
ஆர் எஸ் எஸ் ஆளுனர் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு அடாவடி ஆர் எஸ் எஸ் காரர். ஒன்றிய அரசின் சிபியை, வருமான வருத்துறை மற்றும் அமலாக்கதுறைகளை வைத்து மிரட்டும் மிரட்டலுக்கு அஞ்சாதவர்கள் திமுகவினர். பெண்களின் நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாறியிக்கிறது. பெண்கள் யார் தயவிலும் இல்லாமல் சொந்தக்காளில் நிற்கும் அளவிற்கு “ கலைஞர் உரிமைத் தொகை” மாற்றியுள்ளது.
மோடி திருப்புரங்குன்றம் கோவிலுக்கு வந்தார். திருச்சிக்கு வரவிருக்கிறார். அடிக்கடி வந்தால்தான் எங்களுக்கு அதிக வாக்கு கிடைக்கும். எளிதில் வெற்றிபெற முடியும்.ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்சியில் ஜனநாயக உரிமையை பெயர்த்து எரியப்படுகிறது. இதை எதிர்க்கும் ஒரே மாநில அரசு முக ஸ்டாலின் அரசு. இதை எதிர்த்து நடக்கிற தேர்தல் தான் 2026 தேர்தல்.

சொந்த வாழ்க்கையை ஒழுங்க வாழாதவர்கள் (விஜய்) அரசியல் கட்சி ஆரம்பித்து உள்ளார்கள்.மக்களாகிய நீங்கள் ஏஆந்துவிடாதீர்கள் . இந்த ஆட்சி கஷ்டப்பட்டு வந்துள்ளது.இது டபுள் இன்ஜின் ஆட்சி இல்லை, சிங்கிள் இன்சின் தான். மீண்டும் முக ஸ்டாலின் தான் ஆட்சி அமைக்கவுள்ளார் . ஆனால் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுனர் ரவி இல்லை. அவருக்கு அழைப்பு கொடுத்து வரவழைக்க வேண்டும்.திராவிடம் வெல்லும், அதை வரலாறு சொல்லும்” திராவிடர் கழக தலைவர் கீ வீரமணி பேசினார்.
முன்னதாக வத்தலகுண்டு எல்லைப் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் தலைவர் கீ.வீரமணி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



