• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அம்மையநாயக்கனூர் போலீசார் தீவிர வாகன சோதனை..,

ByPuthar Pandian P

Mar 8, 2026

திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டு பிரதீப் , நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன் ஆகியோர் உத்திரவின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையில் போலீசார், நெடுஞ்சாலை துறை ரோந்து வாகன போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுட்டனர்.

மேலும் கொடைரோடு அருகேயுள்ள ராஜதானிக்கோட்டை பிரிவு சந்திப்பு இணைப்பு சாலையில் போலீசார் தீவிர வாகனம், மோட்டார் சைக்கிள், செல்பவர்களிடம் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்கள் நிறுத்தி சோதனை செய்தும், லைசென்ஸ், ஹெல்மெட் உட்பட ஆவணம் இல்லாதவர்களுக்கு அபதாரம் விதித்தனர். மேலும் விபத்துக்கள் அதிகரிப்பு குறைப்பது குறித்தும் அவர்களிடம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி போலீசார் ஈடுபட்டனர்.