• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

செங்கல் சூலை தீ வைப்பதால் வெளியே வரும் புகை மண்டலமாக மக்களுக்கு மூச்சு திணறல்..,

ByPuthar Pandian P

Mar 8, 2026

திண்டுக்கல் – மதுரை செல்லும் நான்கு வழிச்சாலை கொடைரோடு சுங்க சாவடி உள்ளது. இந்த சுங்க சாவடி அருகே தளி கிராமம் சுமார் 100க்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தின் சாலை ஓரத்தில் ஒரு செங்கல் சூலை செயல்படுகிறது. இந்த செங்கல் சூலையில் தீ மூட்டி செங்கல் எடுத்து வருகின்றனர். இதனால் தீயினால் புகை அதிகமாக வருவதால் இப்பகுதி வசிக்கும், சாலையில் கடந்து செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தோட்டத்தில் குடியிருக்கும் மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்

சுங்க சாவடி கடந்தும் செல்லும் வாகன ஓட்டிகள் பயணிகள் பெரிதும் புகையால் பாதிப்பு ஏற்படுகிறது. செங்கல் சூலையில் வெளியே வரும் புகையால் இப்பகுதி மக்களுக்கு சுவாசிக்க முடியாத மூச்சு திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

தனியார் செங்கல் சூலை செயல்படுத்தி வரும் நபர்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் செங்கல் சூலையால் வெளிவரும் புகை மண்டலத்தால் பாதிப்பு ஏற்படுத்து அவல நிலையை போக்க வேண்டும் தமிழக அரசு , திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.