• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பீர் பாட்டில் உடைத்து மிரட்டியவர் கைது..,

ByS.Ariyanayagam

Mar 7, 2026

திண்டுக்கல்லில் கூலித் தொழிலாளியிடம் உடைந்த பீர்பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன் நகரை சேர்ந்த முருகேசன் மகன் தமிழ்செல்வன்(24) என்பவர் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்ததாக ராஜ் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர்கள் சரத்குமார், பிரபாகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.