• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஜவுளி இயந்திரங்கள்,உதிரிபாகங்கள் மற்றும் துணைக்கருவிகளின் கண்காட்சி..,

BySeenu

Mar 7, 2026

கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சி டெக்ஸ்பேர் 2026 துவங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி மார்ச் 9 வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது. கண்காட்சியை ராம்கோ குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார்.

இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் (CITI) தலைவர் ல் அஷ்வின் சந்திரன் தொடக்க விழாவிற்கு தலைமை தாங்கினார். மத்திய MSME அமைச்சகத்தின் இயக்குனர் திரு. எஸ். சுரேஷ் பாபுஜி மற்றும் ஷலீன் தோஷ்னிவால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த டெக்ஸ்ஃபேர் 2026 கண்காட்சியில் 240 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும், சில யூனியன் பிரதேசங்களிலிருந்தும் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன என்பது ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 258 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.