• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அதிரடி சோதனையில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா, போதை வஸ்துக்கள் பறிமுதல்..,

BySeenu

Mar 1, 2026

கோவை மாவட்ட காவல்துறையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா, போதை வஸ்துக்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல், போதை வஸ்த்துக்கள், செல்போன்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனையில் பறிமுதல் செய்யபட்ட அனைத்தும் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை மாவட்டத்தில் காவல்துறையினர் தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும் இன்று காலை பேரூர் கருமத்தம்பட்டி செட்டிபாளையம் மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 இடங்களில் ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு டிஎஸ்பி ஒன்பது இன்ஸ்பெக்டர் 300 காவலர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றதாகவும் அதன்படி 22 ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் 4.5 கிலோ கஞ்சா 50 மில்லி கிராம் கஞ்சா ஆயில் சிந்தடிக் ட்ரக்ஸ் மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 18 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். ஐந்து குற்றவாளிகளில் இரண்டு பேர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். வெளி மாவட்டத்திலிருந்து தங்குவதற்கு மாணவர்கள் யாரேனும் வந்தால் வீட்டின் உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கோவை மாவட்டத்திற்கு பெரும்பாலும் வெளியில் குற்றம் செய்துவிட்டு இங்கு தங்குகிறார்கள் எனவே வீட்டு உரிமையாளர்கள் வீட்டை வாடகை விடுவதற்கு முன்பு அவர்களை நன்கு விசாரிக்க வேண்டும் சந்தேகப்படும்படியாக இருந்தால் உடனடியாக காவல்துறையில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால் உடனடியாக எச்சரிக்கை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மெத்தபெட்டமின் எங்கிருந்து வந்தது என விசாரித்து வருகிறோம் என்றும் போதைப்பொருள் ரயிலில் இருந்து வருவதாக தகவல் வந்துள்ளது என்றார். கடந்த ஆண்டு 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறார்கள் அதனையும் தடுக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

எட்டிமடை சாதனை சாவடியில் வாளையார் இரண்டு செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.