• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவை வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்!!

BySeenu

Mar 2, 2026

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, உக்கடம் வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நபருக்கு சுமார் 40 முதல் 45 வயது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை வைத்து அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

குடும்பப் பிரச்சனை அல்லது மன உளைச்சல் காரணமாக அவர் ஏரியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாரா ? யாரேனும் மர்ம நபர்கள் அவரை அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசிச் சென்றனரா ? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா ?
​சம்பவம் நடந்த குளக்கரையைச் சுற்றி உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா ? அல்லது தற்கொலையா ? என்பது தெரியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.