• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

தேசிய அளவிலான சிலம்பப்போட்டி..,

Byஜெ.துரை

Feb 23, 2026

உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சார்பில் 4-வது முறையாக நடைபெறும் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தேசிய அளவிலான நடைபெற்ற இந்தப் போட்டியில்,10-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து 1500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

சிங்கிள் ஸ்டரைக், டபுள் ஸ்ட்ரைட், வாள் கம்பு, வேல் கம்பு, சுருள் வாள், வாள் வீச்சு போன்ற பல பிரிவுகளில் மானவர்கள் தங்கள் வயதின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு தகுதி போட்டிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதில் தேர்வான மாணவர்கள் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பின் தலைவர் கண்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மாநில அரசின் 3% இட ஒதுக்கீடானது தமிழக அரசு விளையாட்டுத்துறை சார்பில் நடைபெறும் முதல்வர் கோப்பை போன்ற அரசு பள்ளி விளையாட்டுகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டம் தோறும் சிலம்பம் பயிற்சி செய்யும் மாணவர்களுக்கென தனிப்பட்ட பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்பட்ட வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் தனிப்பட்ட சிலம்ப ஆசிரியர்களை பணியமர்த்தி கட்டாய சிலம்ப பயிற்சிகள் கொடுத்தால் மட்டுமே சிலம்பப் போட்டியில் மாணவர்கள் சாதிக்க முடியும்.

மாநில அளவில் மட்டும் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த கலையானது தேசிய அளவில் அங்கீகாரம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆயுதம் ஏந்தாமல் தற்காப்பு கலையாகவும் இதனை பயன்படுத்தலாம்.

இன்றைய மாணவர்கள் இதுபோன்ற விளையாட்டுத்துறையில் ஆர்வம் செலுத்தும் போது ஒழுக்கம், தனது உடன் மீதான அக்கறை போன்றவற்றில் கவனம் செலுத்தி மேன்மை பெற வாய்ப்புகள் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.