• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சிக்கல் சமூக ஆர்வலர் கலெக்டரிடம் முறையீடு..,

ByS.Ariyanayagam

Feb 17, 2026

தோல் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் மனு அளித்தார்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக தோல் தொழிற்சாலைகளின் வெளியேறிய கழிவு நீரால் உப்பு மண்ணாக, அமிலத்தன்மை கொண்ட இடத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. மக்கள் நலன் கருதி ஒன்றிய மாநில அரசுகள் நேரடியாக ஆய்வு செய்து பேருந்து நிலைய பணி நடைபெறுவதற்கு முன்பாகவே ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வேறு ஒரு நல்ல இடத்திற்கு பேருந்து நிலையத்தை மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.