• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன்..,

ByS.Ariyanayagam

Feb 16, 2026

கொடைரோடு அருகே, சொத்து பிரச்சினையில் பெற்றோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல், கொடைரோடு அருகே, சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த பாண்டி (70) இவரது மனைவி மீனாட்சி (65) இவர்களது மகன் சுருளி(45) நிலம் மற்றும் சொத்து கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சொத்து கேட்டு சுருளி பெற்றோர் பாண்டி, மீனாட்சியிடம் தகராறில் ஈடுபட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுருளி அரிவாளால் தந்தை பாண்டி, தாயார் மீனாட்சி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினார்.

படுகாயம் அடைந்த பாண்டி, மீனாட்சி இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிசுருளியை அம்மையநாயக்கனூர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.