• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பாதையை ஆக்கிரமித்து குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு..,

Byadmin

Feb 10, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வேளார் தெரு செல்லும் பாதையில் பாதையை ஆக்கிரமித்து குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி கட்டுவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாக கூறி பாதை நடுவில் குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வேளார் தெரு நுழைவாயிலில் குடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்தது இந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டுவதற்கு பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதையின் நடுவே குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பாதை வழியாக இரண்டு தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் செல்லக்கூடிய நிலையில் பாதையை மறித்து உள்ள தொட்டி இடையூறாக இருப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

மேலும் தெருவில் உளுந்தூர் காளியம்மன் கோவில் உள்ளது திருவிழா நடக்கும் காலங்களில் இந்த பாதை வழியாக சாமி ஊர்வலம் நடைபெறும். இந்த குடிநீர் தொட்டியால் சாமி ஊர்வலம் நடைபெறுவதில் இடையூறு ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆகையால் சின்டெக்ஸ் தொட்டியை ஏற்கனவே இருந்த இடத்தில் கட்ட வேண்டும் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் குழந்தைகளுக்கு இடையூறு இல்லாதவாறு சின்டெக்ஸ் தொட்டியை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.