• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

குப்பை கழிவுகளை ஆபத்தான முறையில் அகற்றும் பணியாளர்கள்..,

ByKalamegam Viswanathan

Feb 2, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மலை போல் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நேற்று முன் தினம் தனியார் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளிவந்திருந்த நிலையில் சம்பந்தப்பட்ட மேலக் கால் ஊராட்சி நிர்வாகம் ஊராட்சியின் துப்புரவு பணியாளர்களை கொண்டு கால்வாயில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது

யானை பசிக்கு சோளப்பொறி என்ற கதையாக

இயந்திரங்கள் மூலம் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டிய ஊராட்சி நிர்வாகம் ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்களைக் கொண்டு கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்றி வருவது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் துப்புரவு பணி மேற்கொள்ளும் பணியாளர்கள் சிறிது தவறினாலும் கால்வாயில் விழுந்து உயிர் சேதம் ஏற்படக்கூடிய நிலை உள்ளதாகவும் மேலும் ஆபத்தான நிலையில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் முகக்கவசம் கையில் கையுறை தொற்று நோயை தடுக்கக்கூடிய தடுப்பு கருவிகள் உள்ளிட்ட எந்த ஒரு சாதனங்களும் கருவிகளும் இல்லாத நிலையில் ஆபத்தான வகையில் கால்வாயின் பக்கவாட்டு தடுப்புகளில் அமர்ந்து ஊராட்சி தெருக்களின் கழிவுநீர் கால்வாயை துப்புரவு செய்யும் கருவிகளைக் கொண்டு மலை போல் தேங்கி உள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது

சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அங்கிருந்த ஊராட்சி பணியாளர்களிடம் கூறி கழிவுகளை அப்புறப்படுத்த சொல்லிவிட்டு சென்றதாக கூறுகின்றனர்

மேலும் ஊராட்சி செயலாளரும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரம் இணைந்து இது போன்ற துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கையில் விளையாடக்கூடிய செயல்களை செய்வதாக அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் ஊராட்சி செயலாளர் மற்றும் வாடிப்பட்டி
வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு பெரிய அளவில் கால்வாயில் தேங்கி கிடைக்கும் குப்பைகளை அகற்ற வைத்தது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளதுடன்

இதன் காரணமாக மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் வயதானவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இயந்திரங்கள் மூலம் கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.