• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மருது பாண்டியன் காளை..,

ByKalamegam Viswanathan

Feb 2, 2026

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் சோழவந்தான் தொகுதி சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு திமுக கவுன்சிலர் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன் காளை வெற்றி பெற்று பரிசு வென்றது வெற்றி பெற்ற காளைக்கு மாலை மரியாதை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள். டாக்டர் மருது பாண்டியன் மற்றும் காளை வளர்ப்பவர்கள் எம் வி.எம் குழும பணியாளர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.