• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவில் தேர்தல் பரப்புரை..,

ByKalamegam Viswanathan

Feb 2, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக, அவனியாபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மந்தை அம்மன் கோவிலில் த.வெ.க கட்சியின் சார்பில் கட்சி.வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காகச் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

வழிபாடுகளைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குக் கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் மற்றும் மற்றும் கட்சியின் சார்பில் விநியோகிக்கப்பட்டன.
மேலும், கட்சியின் சின்னமான ‘விசில்’ மற்றும் இனிப்புகளைப் பொதுமக்களுக்கு வழங்கித் தொண்டர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு நோட்டிஸ் மற்றும் மற்றும் பரப்புரை செய்வதாக கூறி காவல்துறையினர் தலையிட்டு விழா ஏற்பாட்டாளர்கள் ள் மற்றும் மாவட்ட செயலாளரிடம் கூறினர்.

இதனால் காவல்துறையினருக்கும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் காரசாரமான விவாதம் நிலவியது.

அப்போது, “அரசியல் பிரச்சாரங்கள் செய்வதற்கு மட்டுமே காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குவதற்குத் தனியாக அனுமதி தேவையில்லை” என்று தா.வெ.க-வினர் வாதிட்டனர்.

போலீஸார் தடையைத் தொடர்ந்து, நிர்வாகிகள் அங்கிருந்து நகர்ந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்குப் பேருந்துக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்குத் தொடர்ந்து இனிப்புகளை வழங்கித் தங்களது கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடினர்.