• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு பூஜை..,

ByK Kaliraj

Feb 2, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன் குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு மாலை அணிந்த ஏராளமான பக்தர்கள் துலுக்கன் குறிச்சி உள்ள காளியம்மன் கோவில் இருந்து முக்கிய வீதியில் வழியாக வாழை மர பாலசுப்ரமணியம் திருக்கோயில் வரை ஊர்வலம் வந்து பாலசுப்பிரமணியனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியனுக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் பஞ்சாமிர்தம் திரவிய பொடி உள்ளிட்ட 21 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக குழந்தை வரம் வேண்டியும் மலை பெய்து விவசாயம் செழிக்கவும் கடன் பிரச்சனை திரவம் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன சுற்றுவட்டார் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை முன்னால் கமிட்டி என்ன செய்திருந்தனர் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.