• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இலவச கண் பரிசோதனை முகாம்..,

ByK Kaliraj

Feb 2, 2026

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் அமைந்துள்ள ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின், பெண்கள் மேம்பாட்டு அணி (Women Empowerment Cell) உன்னத் பாரத் அபியான் (UBA) மற்றும் இந்திய மருத்துவ கழகம்– சிவகாசி கிளை இணைந்து, தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றை நடத்தியது.

VSKD நாடார் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகாசி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவிற்கு AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் டாக்டர் M. சேகர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.VSKD நாடார் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் . சாரதா, வாழ்த்துரை வழங்கினார். இம்முகாமில், சிவகாசியைச் சேர்ந்த புகழ்பெற்ற கண் மருத்துவமனையான அனில் குமார் மருத்துவமனையின் குழந்தைகள் கண் மருத்துவர் ரஸ்மி கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.

இவ்விழாவில் 375க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

பெண் குழந்தைகளின் ஆரோக்கியமும், பார்வைத் திறனும் மேம்பட வேண்டும் என்ற சமூக பொறுப்புணர்வுடன் இந்த இலவச கண் மருத்துவ முகாம் ஏஏஐ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தேன்மொழி பேராசிரியர் மெபி செல்வராஜ் இணை ஒருங்கிணைப்பாளர் துணை பேராசிரியை லட்சுமி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இலவச கண் பரிசோதனை முகாம், சமூக நலனுக்காக கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளும் சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.