• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சம்பா நெல் பயிர்கள் மூழ்கிய விளை நிலங்கள்..,

ByM.I.MOHAMMED FAROOK

Nov 30, 2025

காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயலின் காரணமாக நேற்றைய முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்து வந்தது இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு அடுத்தபடியாக சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக காரைக்கால் மாவட்டம் அடுத்த திருநள்ளார் கிராம சுற்று வட்டார பகுதில் சம்பா நெற்பயிர்கள் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கி ஏரி போல் காட்சி அளிக்கிறது அதேபோல் திருநள்ளாறு நெடுங்காடு பிள்ளை தெரு வாசல் மற்றும் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் சுமார் 15,000 சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் திணறி வரும் நிலையில் வடிகால் வாய்க்கால் முழுமையாக தூர்வாராததே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் கனமழை காரணமாக நெற்பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை கொண்டு கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விளைநிலங்கள் முழுவதும் ஏரி போல் காட்சியளிக்கிறது.